நெகிழ வைத்த பாஜகவினர்! மயிலத்தில் பிரதமரின் தாய்க்கும், நடிகர் மாரிமுத்துவுக்கும் சிலை! ஏன் தெரியுமா..

நெகிழ வைத்த பாஜகவினர்! மயிலத்தில் பிரதமரின் தாய்க்கும், நடிகர் மாரிமுத்துவுக்கும் சிலை! ஏன் தெரியுமா..


விழுப்புரம்1: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரான ஹீராபென் மோடி மற்றும் ‛எதிர்நீச்சல்' தொடர் மூலம் பிரபலமான மறைந்த நடிகர் மாரிமுத்து ஆகியோருக்கு விழுப்புரம் அருகே பாஜக தொண்டர்கள் சிலை திறந்து நெகிழ வைத்துள்ளனர். மேலும் சிலை திறப்பின் பின்னணி குறித்தும் விவரித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி. இவர் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு 100 வயதை எட்டினார். பிரதமர் மோடி அவ்வப்போது டெல்லியில் இருந்து குஜராத் சென்று தாயை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக உடலம் நலம் பாதிக்கப்பட்ட ஹீராபென் மோடி கடந்த ஆண்டு இறுதியில் காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு பிரதமர் மோடி இறுதி சடங்குகள் செய்த பிறகு தகனம் செய்யப்பட்டது.

அதேபோல் சன்டிவியில் வெளியாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மாரிமுத்து. தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் இயக்குனராகவும், நடிகராவும் இருந்தார். அதன்பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார். எதிர்நீச்சல் சீரியலில் அவர் ஏற்று நடித்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் வயது பாகுபாடு இன்றி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தான் 2 மாதங்களுக்கு முன்பு காலை வேளையில் சென்னையில் 'எதிர்நீச்சல்' சீரியலுக்காக டப்பிங் பேசியபோது மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

Selected Image

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி மற்றும் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜக தொண்டர்கள் சிலர் சிலை வடித்துள்ளனர். ஹீரா பென் மோடி இருக்கையில் அமர்ந்து இருப்பது போலவும், நடிகர் மாரிமுத்து நிற்பது போன்றும் சிலை உருவாக்கப்பட்டது.

இந்த சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க திறக்கப்பட்டது. திரைப்பட சண்டை பயிற்சியாளரான ஜாகுவார் தங்கம் இந்த சிலைகளை திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு பற்றி பாஜக தொண்டர் ஒருவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தாயாரின் சிலை மயிலம் தருதாழி கோவிலில் நிறுவப்பட்டது. இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது ஏன் என்று கேட்டால் நாடு போற்றும் நல்ல பிரதமராக மோடி இருக்கிறார்.

அவரை பெற்றெடுத்த தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை போற்ற வேண்டும், வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக தான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் போற்றக்கூடிய வகையில் இருக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே. இதனால் அவரது தாயாரின் சிலையை எமகண்டேஸ்வரர் கோவிலில் திறந்து வைத்துள்ளோம். ஜாகுவார் தங்கம் தலைமையில் சிலை திறக்கப்பட்டுள்ளது'' என்றார்.

author box related posts Comments comment form

Leave a Reply